என் ரகசியப்
பொக்கிஷம்
நாட்குறிப்பு........
![]() |
| Add caption |
உன்னை தவிர
வேறு எதையாவது பற்றி -கவிதை
எழுதத் தொடங்குவேன்
இறுதியில் உன்னைப் பற்றியே
எழுதி முடித்து விடுவேன்.......
ஊமைகள் கூட
பேசும் மொழி,
காதல் மொழி......
என்னிடம் இருக்கும்
நீ எறிந்த பேனா கூட
இன்று உன்னை பற்றி
கவிதை எழுதுகிறது
காரணம்
என்னை போல்
அதுவும் உன்னை நேசிப்பதால்........
உன்னை மட்டுமே நேசித்து
உனக்காக வாழும்
சுகம் போதும்....
உன்னை எதிர் பார்த்தே
வாழ்ந்திருப்பேன் ♥ ♥
என் வாழ்வின் இறுதி வரையிலும்......
காதல் கண்டு பாறை கூட-கனிந்து
என் மேல் இரக்கம் காட்டுகிறது.
நீ மட்டும் ஏன் என் மேல்
இரக்கம் காட்ட மறுக்கிறாய்
பாறையை விட கொடுமையானதா
உன் இதயம் ?????








No comments:
Post a Comment